சீர்காழியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா
Oct 31 2025
54
சீர்காழி , நவ , 01 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தேர் கீழ வீதி கோமளவல்லி அம்மன் கோயில் அருகில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 63-வது குரு பூஜையும் 118-வது ஜெயந்தி விழாவும் நடைபெற்றது.
மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நகர இளைஞரணி செயலாளர் செழியன் தலைமை வகித்தார்.
பேட்டரி சங்கர் வரவேற்றார்.
பாலுமணி, குமரவேல், அய்யப்பன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக
இந்து மக்கள் கட்சியின்
மாநில செயலாளர்
கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கலந்து கொண்டு தேவரின் திரு உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி பேசினார். இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் வீரபாலு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சுற்றுசூழல் பிரிவு தலைவர் அருணாச்சலம் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கடவாசல் பாலசுப்ரமணியன், கொளஞ்சி மற்றும்
முத்து பாண்டி , கார்த்தி, முருகன், ராமு, சிவா, வசந்த், சுரேஷ், முத்துகுமார் உள்ளிட்ட மூமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நகர தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?