சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் விலையில்லாமல் வேதனை
Jul 13 2025
11

தேனி மாவட்டம் சின்னமனூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் அதிகமான கிராமங்கள் தக்காளி பயிரிடப்பட்டு சின்னமனூர் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் ஏலம் விடப்படுகிறது
சின்னமனூர் பகுதியில் விவசாயிகள் தக்காளிகள் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
இந்த விலை குறைவான திற்கு காரணமானது
சின்னமனூர் பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கட்
மற்றும் உழவர் சந்தைகளில் வெளிமாநில தக்காளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் அவதியடைவது தெரிகிறது
ஆனால் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக வெளி மாநில தக்காளிகளுக்கு சின்னமனூர் காய்கறி மார்க்கட் மற்றும் உழவர் சந்தைகளில் முன்னுரிமை கொடுப்பதால்
உள்ளூர் தக்காளிகள் விலை சரிந்துள்ளது
சில இடங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தாங்களே குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது அல்லது பறிக்காமல் செடியிலேயே அழுக விட்டுள்ளனர், இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
தொடர்ந்து நாங்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் தமிழக அரசுதான் கருணை காட்ட வேண்டும் என்று கூறுகிறார் விவசாயி.....
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?