சிதறல்கள்....

சிதறல்கள்....

*சிறுவன் கிழித்தகோடு //*

*பாதை மாறிச் செல்கின்றன //*

*எறும்புகள் //*

---------------------------------------------------

*உழைத்தும் பயனில்லை //*

*சம்பளக்கவரை பறித்துக் கொண்டான் //*

*கந்து வட்டிக்காரன் //*

---------------------------------------------------

*மாசடைந்த குளம் //*

*வேதனையை வெளிப்படுத்துகிறது //*

*நீர்க்குமிழிகள் //*

---------------------------------------------------

*கண்ணீர் அஞ்சலி //*

*படங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் //*

*உறவினர்கள் மகிழ்ச்சி //*

---------------------------------------------------

*சுருக்குப் பையில் //*

*கருவாடு விற்ற காசு //*

*மணக்கிறது //*

---------------------------------------------------

*ஆற்றங்கரை ஓரம் //*

*வளைந்து வளைந்து செல்கிறது //*

*ஒற்றையடிப் பாதை //*

---------------------------------------------------

*சிறுமியின் மகிழ்ச்சி //*

*கையில் பலவண்ணக் கடிகாரம் //*

*ஜவ்வு மிட்டாய் //*

---------------------------------------------------

*சூட முடியவில்லை //*

*பார்த்து பார்த்து ஏங்குகிறாள் //*

*கூடை நிறைய பூக்கள் //*

---------------------------------------------------

*புதிய மெத்தை //*

*பஞ்சு பஞ்சாக வருகிறது //*

*தவணைமுறையில் வாங்கியது //*

---------------------------------------------------

*ஏர் உழுகிறது //*

*கன்று ஈனாத பசுமாடு //*

*நாட்டு வைத்தியம் //*

---------------------------------------------------

*பா. செந்தில்குமார்*

*கோவை*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%