சாத்துர், ஜன.,
- சாத்தூர் அருகே லாரி மீது ஆம்னிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் புழல் சிறைக் காவலர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து களியக்காவிளை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இதில் 48 பேர் பயணம் செய்தனர். பேருந்தை சென்னையைச் சேர்ந்த அபிராம் பாரத் (27) என்பவர் ஓட்டினார். சாத்தூர் சுங்கச் சாவடி அருகேயுள்ள எட்டூர்வட்டம் பகுதியில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த கிருஷ்ணவேணி (57),சந்தோஷ் செல்வநாயகி (32),மோகனரங்கா (35), ஆவடிச்செல்வி, பாலசுப்பிரமணியன் (76), மகாலிங்கம் ஆகிய 6 பயணிகள் காயமடைந்தனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த லெனின்(43) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர், புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?