குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ‘ட்ரோன்’ பறக்க தடை
Aug 31 2025
16

சென்னை:
அரசு முறை பயணமாக, குடியரசு தலைவர் சென்னை வருவதை முன்னிட்டு 2, 3 ஆகிய இரு தேதிகளிலும் சென்னையில் ட்ரோன் பறக்க தடை விதித்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் அரசு முறை பயணமாக சென்னை வருகை தர உள்ளார். குறிப்பாக 2-ம் தேதி மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், 3-ம் தேதி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படுகிறார்.
முன்னதாக 2-ம் தேதி இரவு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தங்க உள்ளார். இதையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான, சென்னை விமான நிலையம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராஜ் பவன் மற்றும் குடியரசு தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதிகளில் 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட தடை விதித்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?