புதுடெல்லி, டிச.11 -
தமிழ்நாட்டில் உள்ள கீழடியில் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த வரைவு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்துள்ளதாகவும், 2018-ம் ஆண்டிலிருந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த இறுதி அறிக்கை இதுவரை பெறப்படவில்லை என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தமிழ்நாட்டு எம்பிக்கள் ஜோதிமணி, செல்வகணபதி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், தமிழகத்திலிருந்த பல்வேறு கலாச்சாரங்கள் குறித்து தமிழக தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் (2025 ஆகஸ்ட் வரை) மேற்கொண்ட 45 அகழ்வாராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. வழக்கமான நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொல்லியல் ஆய்வு அலுவலர்களிடம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி தளங்கள் தொடர்பான சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் மாநில தொல்லியல் துறை மற்றும் இதர நிறுவனங்கள் / முகமைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?