காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு லாரிகளை முற்றுகையிட்டு காட்டு யானைகள் அட்டகாசம்

காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு லாரிகளை முற்றுகையிட்டு காட்டு யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம், ஆக. 14–


தாளவாடி அருகே லாரியை நிறுத்தி கரும்பை சுவைத்த காட்டு யானைகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கரும்பு லாரிகளை தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் யானைகள் தாளவாடி மற்றும் சாம்ராஜ் நகரில் இருந்து கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து கரும்புகளை ருசி பார்க்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.


இந்நிலையில் தாளவாடி -சத்தியமங்கலம் செல்லும் வழியில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் வனச் சோதனைச் சாவடி அருகே அவ்வழியாக கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி காட்டு யானைகள் தங்களது தும்பிக்கையால் கரும்பை எடுத்து தின்றன. நீண்ட நேரம் லாரியை வழிமறித்து அட்டகாசம் செய்தபடியே கரும்புகளை தனது குட்டியுடன் காட்டுயானைகள் ருசி பார்த்தன. இந்தக் காட்சியை பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டது வைரலாகி உள்ளது. சமீப காலமாக தாளவாடி வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%