ஈரோடு மாவட்ட முதல்வர் மருந்தகத்தில் கடந்த மாதங்களில் ரூ.46.50 லட்சத்துக்கு மருந்து பொருட்கள் விற்பனை: கலெக்டர் கந்தசாமி தகவல்
Aug 17 2025
11

ஈரோடு, ஆக. 14–
ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி, நால்ரோடு, திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டு, மருந்தகத்திற்கு மருந்து வாங்க வருகை தந்திருந்த நுகர்வோரிடம் மருந்தகத்தின் பயன்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 36 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 22 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கள் மூலமாகவும், 14 மருந்தகங்கள் தனியார் மூலமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்கள் மூலம் இங்கு ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மிகக் குறைவான விலையிலும் பிற மருந்துகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் மருந்தகங்களில் ஏறத்தாழ 216 வகையான மருந்துகள் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கலெக்டர் கந்தசாமி, முதல்வர் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துப்பொருட்களின் விற்பனை விபரம், மருந்து பொருட்களின் இருப்பு, அதிகளவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விபரம், மாதந்தோறும் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரம் உள்ளிட்டவை குறித்து விற்பனையாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 24 முதல் ஆகஸ்ட் 12 வரை ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்துபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மருந்தகத்திற்கு மருந்து வாங்க வருகை தந்திருந்த நுகர்வோரிடம் மருந்தகத்தின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் செயலாட்சியர் திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கம் மு.பா.பாலாஜி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?