காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
Aug 27 2025
105
காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: உற்சவர் மாட வீதிகளில் உலா!
வேலூர்,ஆக.28-
வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 27ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முற்பகல் 11 மணி அளவில் ஸ்ரீ செல்வ விநாயகர் உற்சவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த மாட வீதி உலா சுமார் 3 மணி நேரம் இடைவிடாது நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான அனைத்து சிறப்பு பூஜைகளையும் தணிகைவேல் ஐயர் விமரிசையாக செய்து பக்தர்களுக்கு பிரசாதங்களை (குங்குமம், விபூதி, சந்தனம்) விநியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் செல்வி ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் நிர்வாக குழுவைச் சேர்ந்த 12 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?