கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்சில் 142 பேர் உயிரிழப்பு வியட்நாமில் கரையை கடக்கிறது

கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்சில் 142 பேர் உயிரிழப்பு வியட்நாமில் கரையை கடக்கிறது



மணிலா, நவ. 7–


பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. அந்​நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்​டுள்​ளது.


பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தியத்தை கடந்து தென்​ சீனக் கடல் நோக்கி நகர்ந்​தது. இதில் பிலிப்​பைன்​சின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்ளக் காடாக மாறின. இ​தில் சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார்​கள், ஆற்​றங்​கரையோர வீடு​கள், பெரிய அளவி​லான கப்​பல் கன்​டெய்​னர்​களும் கூட வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.


பிலிப்​பைன்சில் இந்த ஆண்டு எதிர்​கொண்ட பேரிடர்களில் மிக மோசமான பேரிட​ராக இது கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் மத்​திய பிராந்​தி​யத்​தில் கல்​மேகி புயலுக்கு 142 பேர் உயி​ரிழந்​தனர். இவர்களில் பெரும்​பாலானோர் வெள்​ளத்​தில் மூழ்கி இறந்​தனர். 127 பேரை காண​வில்​லை.


அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், கல்​மேகி புய​லால் சுமார் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ஏற்கனவே நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உட்பட சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்​துள்​ளனர் என்றார்.


இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் அதிபர் பெர்​டி​னாண்ட் மார்​கோஸ் ஜூனியர் நேற்று அந்​நாட்​டில் அவசர நிலையை பிரகடனம் செய்​தார். அவசர நிதியை அரசு விரை​வாக வழங்​க​வும், உணவுப் பதுக்​கல், அதிக விலை நிர்​ண​யம் ஆகிய​வற்றை தடுக்​க​வும் இது உதவும் என கூறப்​படு​கிறது.


கல்​மேகி புயலுக்கு செபு மாகாணம் மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அங்கு மட்​டும் 71 பேர் உயி​ரிழந்த நிலையில் 69 பேர் காயம் அடைந்​தனர். மேலும் 65 பேரை காண​வில்​லை. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஏற்பட்ட 6.9 ரிக்​டர் நிலநடுக்​க பாதிப்பில் இருந்து செபு இன்​னும் மீண்​டு​வ​ராத நிலை​யில் மற்​றொரு பேரிடரால் அப்​பகுதி மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.


இந்த சூறாவளி புயல், சிபு மற்றும் நீக்ரோஸ் ஆகிய தீவுகளை தாக்கி விட்டு கடலுக்கு திரும்பி விட்டது வியட்நாமில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.


வியட்நாமின் மத்திய பகுதியை அது இன்று நெருங்கியுள்ளது. இந்த சூறாவளி புயலால் வியட்நாமில் கனமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து தெருவெங்கும் ஓடுகிறது. இதில் சிக்கி 47 பேர் பலியாகி உள்ளனர்.


இதனால் கடல் அலைகள் 26 அடி உயரத்திற்கு (8 மீட்டர்கள்) எழும்பும் என்றும் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த புயலாக என தேசிய வானிலை மையம் இன்று தெரிவித்து உள்ளது. இன்றிரவு மத்திய வியட்நாம் பகுதியை அது தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை வெளியேறி செல்லும்படி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%