கதிரவனே காவியமே

கதிரவனே காவியமே



   " மாயமில்லை

     மந்திரமில்லை

     ஜாலமும் இல்லை..."


      நீ இல்லாமல்

      உயர்வு என்பது

      எனக்கில்லை

      என் மன்னவனே ..."


     காலை முதல்

     மாலை வரை

     என்னடோடு 

     பயணிக்கும் நீ ..."


     இல்லை இல்லை

     தினமும் உன்னோடு

     பயணிக்கும் நான்

     உன் வரவில்

     குளிர் அடங்கி ...."


     உடல் சிலிர்த்து

     கால் முதல்

     தலை வரை

     குலுங்கி நிமிர்ந்து

     தயாராகிறேன் .


     நீ இல்லாமல்

     என் உழைப்பும்

     மறைந்து விடும்

     உன் கதிர்வீச்சு

     பட்டுவிட்டால்...."


     புத்துணர்ச்சி

     பெறுகின்றேன்

     மாலை நீ

     மறைந்து விட்டால்

     நானும் சுருங்கி

     சுனங்கி

     விடுகின்றேன்...."


      இரவு எனும்

      இருட்டில் உறங்கி

      விடுகின்றேன்

      காலை உன்னைக்

      கண்டு விட்டால் ..."


       உயிர் மூச்சு

       பெறுகின்றேன்

       நீயும் கண்ணுக்கு

       தெரியும் தெய்வம்

       தான் துதிக்கின்றேன்

       உன்னை கதிரவனே ....."


  - சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%