
காலை உணவு திட்ட விரிவாக்கம் இன்று ஆகஸ்ட் 26 முதல் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதனடிப்படையில், இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட ஓலைக்குடா அரசு நிதியுதவி பெறும் புனித மரியன்னை துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களை பள்ளி தலைமையாசிரியை சூரியா நிர்மலா மேரி வரவேற்றார்.
இராமேஸ்வரம் நகராட்சி அலுவலர்கள், கடலோர காவல் படை கமாண்டர், நகர்மன்ற உறுப்பினர், கிராம நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தனர்.
ஆசிரியர் ஜார்ஜ் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?