ஓநாய் அழுவது போல பழனிசாமிக்கு கவலை ஏன்? மா.கம்யூ பதிலடி

ஓநாய் அழுவது போல பழனிசாமிக்கு கவலை ஏன்? மா.கம்யூ பதிலடி


திருவாரூர், ஆக. 9- ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல மா. கம்யூ. பற்றி, அதிமுக பழனிசாமி கவலைப்படத் தேவையில்லை என, மா. கம்யூ., மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

பிஹார் மாநில தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்துள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தேடிச்சென்ற போது வீட்டில் இல்லை என்ற காரணத்தினால் அந்த வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடுத்து மேற்குவங்கம், அசாம்,தமிழ்நாடு,கேரளா உட்பட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் சோதனை முயற்சியாக பீகாரில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்களே ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை தான் நியமனம் செய்கிறார்கள் இதை கண்டித்து நாடு முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

• தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விடும் என்று பழனிசாமி கூறுகிறாரே?

தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, காணாமல் போகிறதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பது வெளிப்படும். பழனிசாமி முதல் நாள் ஒன்றும், மறுநாள் ஒன்றும் மாற்றி,மாற்றி பேசுகிறார். முரண்பாடாக பேசுவதை பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளார். முதலில் அவர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரட்டும். அந்த கூட்டணியில் ஏராளமான விஷயங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. 

அதிமுக, பாஜக கூட்டணியே ஒன்றுபட்ட கூட்டணியாக இல்லாமல் ஒருவர் கூட்டணி ஆட்சி என்பதும், மற்றொருவர் தனித்த ஆட்சி என்பதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%