
கோவை, செப்.3 –
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்களும் பழங்களும் அதிக அளவில் குவிந்துள்ளன.
கேரளாவின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம், ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஓணத்தின் முக்கியத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கோவை, கேரளாவிற்கு அருகாமையில் இருப்பதால், கேரள வியாபாரிகளும் இங்கு வசிக்கும் மக்களும் கோவையில் வந்து பூக்கள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
பூக்கள் விலை நிலவரம்
கோவை மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச் சங்கச் செயலாளர் அன்சாரி இது குறித்துப் பேசுகையில், "தற்போது செண்டுமல்லி ₹120 முதல் ₹150 வரையிலும், வாடாமல்லி ₹120 முதல் ₹150 வரையிலும், ரோஜா ₹300 வரையிலும், கலர் செவ்வந்தி ₹250 வரையிலும், மல்லி ₹800 வரையிலும் விற்பனையாகிறது. கேரள வியாபாரிகள் ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டதால், பூக்களின் விலை சற்று குறைவாகவே உள்ளது. இல்லையெனில், விலை இரு மடங்காக உயர்ந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
பழங்களின் விற்பனை
சாய்பாபா காலனியில் உள்ள வாழைக்காய் மண்டிக்கு அதிக அளவில் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இது குறித்து வாழைக்காய் மண்டி தலைவர் அருள்மொழி செல்வன் கூறுகையில், "பூவன், நேந்திரன், கேரளா ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட அனைத்துப் பழங்களும் இங்கு விற்பனைக்குக் குவிந்துள்ளன. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தப் பழங்கள் வருகின்றன. தற்போது செவ்வாழை கிலோ ₹55-க்கும், நேந்திரன் பழம் கிலோ ₹30 முதல் ₹32 வரையிலும் விற்பனையாகிறது" என்று தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?