எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை..? வெளியான முக்கிய அறிவிப்பு.. இனி 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி.

எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை..? வெளியான முக்கிய அறிவிப்பு.. இனி 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி.

புதுடெல்லி,


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.


இந்த கூட்டத்தில் புதிய ஜி.எஸ்..டி சீர்திருத்தங்களை வருகிற 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாதாம் மற்றும் உலர் பழங்கள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், ஜாம்கள், நெய், வெண்ணெய், ஊறுகாய், சட்னிகள், டிராக்டர்கள், குளிர்சாதன பெட்டிகள், ஏசி உட்பட சுமார் 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைகிறது.


ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்பட்டது. மேலும் அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறி உள்ளன. சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறைய உள்ளது.


குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.


இதனைத்தொடர்ந்து தற்போது பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சார்ந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது தினசரி பயன்படுத்தும் சர்க்கரை, தேநீர் போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம், வெண்ணெய், நெய், கைப்பேசி போன்ற பொருள்களுக்கு 12 சதவீதம், சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பொருள்களுக்கு 18 சதவீதம், தொலைக்காட்சி, குளிர்பதனப்பெட்டி மற்றும் குளிரூட்டிகள் (ஏ.சி.) போன்ற பொருள்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.


இந்நிலையில் தற்போது மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளநிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் 28 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருள்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , “ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான தொனியை வகுத்தார். தீபாவளிக்குள், விரைவில் அதற்கான பலனை வழங்க அவர் முடிவு செய்தார். இந்த சீர்திருத்தம் விகிதங்களை சீரமைப்பது மட்டுமல்ல, கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வாழ்க்கை முறையை எளிதாக்குவதும் ஆகும், இதனால் வணிகங்கள் மிகவும் எளிதாக இணைந்து செயல்பட முடியும். தலைகீழ் வரி கட்டமைப்பு சிக்கல்களை நாங்கள் சரிசெய்துள்ளோம், வகைப்பாடு தொடர்பான சிக்கல்களை நாங்கள் தீர்த்துள்ளோம், மேலும் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்து ஸ்திரத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை இருப்பதை உறுதிசெய்துள்ளோம்.


ஜி.எஸ்.டி. கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கலந்து கொண்ட ஒவ்வொரு நிதி அமைச்சருக்கும் இன்று நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%