உயிர்களுக்கு உணவிடும் சூட்சும பரிகாரம்

உயிர்களுக்கு உணவிடும் சூட்சும பரிகாரம்



மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்களுக்கு உணவிட்டு வருவது நம் அனேக பிரச்சனைகளுக்கு உடனடி பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும். 


அன்றாட வாழ்வில் அதன் பயனை உணரலாம். மேலும் உயிர் வதை (அசைவ உணவு) செய்யாமல் இருப்பதும், உணவுக்காக வெட்ட அழைத்து செல்லப்படும் பசுக்களை காப்பாற்றி பசு மடங்களுக்கு விடுதல் சனி,இராகு,குரு, சுக்கிரன் போன்ற கிரகங்களை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நீண்ட நாள் பிரச்சனைகள் பலவற்றுக்கு திடீர் தீர்வு தேடித்தரும். 


மிக சக்தி  வாய்ந்த பரிகாரம் ஒன்று பசு வதையை தடுப்பது.


இப்பதிவில் எந்த எந்த நாளில் எந்த உயிர்களுக்கு உணவிட்டு பலன் தேடி கொள்ளலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது-


ஜாதகம் இல்லாதவர்கள் ஏழு நாட்களும் தன்னால் முடிந்த அளவு உணவிட்டு பலன் அடையலாம்.


ஞாயிற்றுக்கிழமை - 

சூரியன் 


சப்பாத்தி மற்றும் ஊற வைத்த கோதுமை பசுக்களுக்கு கொடுக்கலாம். வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.


திங்கட்கிழமை- சந்திரன் 


கோதுமை மாவை சிறிய உருண்டைகள் செய்து மீன்களுக்கு உணவிடலாம். (வீட்டில் உள்ள மீன் தொட்டி மீன்களுக்கல்ல). பசுவிற்கு நீர் வைப்பது.


செவ்வாய்க்கிழமை - செவ்வாய்


ஊற வைத்த  கடலை . பருப்பு மற்றும் வெல்லம்- குரங்குகளுக்கு


இனிப்பு பொடி எறும்புகளுக்கு


புதன்கிழமை - புதன் - 


பச்சை புற்கள் - அகத்தி கீரை பசுக்களுக்கு அல்லது குதிரைவாளி (உணவு பொருள்-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) புறாக்களுக்கு


வியாழக்கிழமை குரு  


ஊற வைத்த கொண்டை கடலை - குதிரை மற்றும் பசுக்களுக்கு- சோளம் புறாக்களுக்கு


வெள்ளிக்கிழமை - சுக்கிரன் 


பூனைகளுக்கு பால் - பசுக்களுக்கு புற்கள் அல்லது அகத்தி கீரை


சனிக்கிழமை - சனி  


கருப்பு நாய்கள் மற்றும் கருப்பு பசுக்களுக்கு நல்லெண்ணையில் சுட்ட சப்பாத்தி அல்லது வேறு உணவுகள்.


இராகு  


எருமைகளுக்கு தீனி வைத்தல் மற்றும் யானைகளுக்கு இலை தழை ஏதேனும்.


கேது


நாய் வளர்க்கலாம், அல்லது முயல், பசு எது முடிகிறதோ அது. ஆனால் அவைகளை துன்புறுத்தாமல் தினசரி உணவிட்டு பராமரிக்க வேண்டும். 


இலக்னத்தில், அஷ்டமத்தில் கேது, கேது திசை நடப்பவர்கள் இவற்றை செய்து பலன் அடையலாம்.


பொதுவாகவே தினசரி நாய்களுக்கு ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் ஆவது வாங்கி போட்டு வருவது நலம். 


மேலும் உங்கள் குழந்தைகளுக்கும் நாய்,பூனை சிறு உயிரினங்கள்,எறும்பு போன்றவற்றை துன்புறுத்தாமல் இருக்க கற்று கொடுத்து, கர்ம வினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி வாருங்கள்.



சிவசக்தி 

நாப்பிராம்பட்டி

ஊத்தங்கரை 

கிருஷ்ணகிரி மாவட்டம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%