இளையராஜாவுக்கு 13ந் தேதி தமிழக அரசு பாராட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு
Sep 11 2025
86
சென்னை, செப் 9–
இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கு வரும் 13ந் தேதி தமிழக அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அன்று மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார். லண்டனில் இருந்து இளையராஜா திரும்பியபோதே, அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?