ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி
Dec 09 2025
42
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசமாகின.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 52 இடங்களில் காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்பது இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வார இறுதியில் இந்த மாகாணத்தில் 20 வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகின.
மேலும் டால்பின் சாண்ட்ஸ் கடலோரப் பகுதியில் காட்டுத் தீயால் 19 வீடுகள் எரிந்தன. இங்கு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் சாலை இன்னும் மூடப்பட்டிருப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புலாடெலா நகருக்கு அருகே காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் மீது மரம் விழுந்தது.
வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா
இந்த சம்பவத்தில் அவர் பலியானார். கடந்த வாரம் மட்டும் இப்பகுதியில் காட்டுத் தீக்கு 3,500 ஹெக்டேர் வனப்பகுதியும் நான்கு வீடுகளும் அழிந்துவிட்டன என்று கிராமப்புற தீயணைப்பு சேவை ஆணையர் ட்ரென்ட் கர்டின் தெரிவித்தார்.
இந்தத் தீயை அணைக்க இன்னும் பல நாள்களுக்குத் தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?