ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தீமிதி திருவிழா, தேர்த்திருவிழா என கோலாகலமாக இருக்கும். குறிப்பாக, இந்த மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் பிற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதற்கு முன்பாக நம்முடைய குலதெய்வத்தை வணங்குவது அவசியம்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு என சிறப்பான மகத்துவம் உள்ளது. சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் இருப்பார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.
பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவார்கள். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108 அல்லது 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது வழக்கமாக உள்ளது.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை ஆகும்.
அம்மனுக்கு பிடித்த உணவுகள் என்றால் அது வேம்பு, கூழ், எலுமிச்சை ஆகியவை ஆகும். இவை உடல் நலத்திற்கு நன்மை அளிப்பவை ஆகும். வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில், சக்தி தேவி தனது பல்வேறு சக்திவாய்ந்த வடிவங்களில் பின்வருமாறு போற்றப்படுகிறார்:
முதல் ஆடி வெள்ளிக்கிழமை செல்வத்தின் தெய்வமான சுவர்ணாம்பிகைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
2 வது ஆடி வெள்ளிக்கிழமை அறிவுத் தெய்வமான அங்காள அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
3 வது ஆடி வெள்ளிக்கிழமை தைரியம் மற்றும் ஆரோக்கியத்தின் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - அன்னை காளிகாம்பாள்.
4 வது ஆடி வெள்ளிக்கிழமை உறவுகளின் தெய்வமான காமாக்ஷி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
5 வது ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த செழிப்பின் தெய்வமான லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மக்கள் அம்மன் கோயில்களிலும் வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் செய்து தெய்வீக அன்னையை சாந்தப்படுத்த மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சக்தியிடம் உங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளைச் செய்வது வாழ்க்கையில் நேர்மறை மற்றும் ஒட்டுமொத்த வெற்றியை ஊக்குவிக்கும்.
*ஆடி வெள்ளியை கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்*
ஆடி வெள்ளி அன்று சக்தி தேவியை வழிபடுவது பின்வரும் நன்மைகளை உங்களுக்கு வழங்கும்:
உங்களைச் சுற்றியுள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் அகலும்.
நல்ல ஆரோக்கியம், செல்வம், அறிவு மற்றும் செழிப்பை வழங்கும்.
திருமணம் மற்றும் சந்ததி தொடர்பான தடைகள் அழியும்.
உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேறும்.
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
சிவ. முத்து லட்சுமணன் போச்சம்பள்ளி