
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பங்குனி தாரா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, யூத் மகளிா் 44 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அவா், ஸ்னாட்ச் பிரிவில் 60 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 81 கிலோ என மொத்தமாக 141 கிலோ எடையைத் தூக்கினாா்.
இதையடுத்து, மொத்த எடைக்காக வெள்ளிப் பதக்கமும், கிளீன் & ஜொ்க் பிரிவில் தூக்கிய எடைக்காக தனியே தங்கப் பதக்கமும் பங்குனி தாராவுக்கு கிடைத்தன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%