-------------------------------
கருவரையில் என்னை சுமந்து
கலங்காமல் காத்து வந்த...
பத்து மாதம் என்னை சுமந்து
என்னை பவளமா பெத்தெடுத்த...
எறும்பு என்னை கடிக்க வந்தா
அதுக்கு எமனாக நீ இருந்த....
உன் ரத்தத்தை பாலாக்கி
கொடுத்து என்னை நீ வளத்தா...
சேலையிலே தொட்டில் கட்டி
சுகமா என்னை தூங்க வச்ச...
நான் பசிச்சி அழுகு முன்னே பதறி நீ வந்து நிப்பே...
சாமிக்கு மேலே தாண்டா அம்மா மா மா
அவளுக்கு முன்னாடி அத்தைனையும் சும்மா...
அவளுக்கு முன்னாடி
அத்தனையும் சும்மா...
அம்மாவை அவமதிச்சா
நமக்கு வாழ்வு ஏது
அவள காத்து வந்தா கடவுள் நமக்கேது....
அம்மாவை வணங்கி பாரு
அத்தனையும் அத்துபடி
அவ காலை தொட்டு வணங்கி உன் செயலை செய்து முடி....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?