அமெரிக்கா, தமிழ்நாடு வாழ் கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
Dec 23 2025
25
தன்முனைக் கவிதைகள் வரலாற்றில் தமிழ் மாதங்களின் அடிப்படையில் கவிஞர்களது தன்முனை நூல்களை நூலேணி பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அமெரிக்க தன்முனைக் கூடமும் நூலேணி பதிப்பகமும் இணைந்து 22/12/2025 திங்கள் கிழமை மாலை மேடவாக்கத்தில் உள்ள கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தன்முனை நூலகத்தில் நடைபெற்றது. முன்னதாக நூலேணி பதிப்பக உரிமையாளர் கன்னிக்கோவில் இராஜா கவிஞர்களை வரவேற்றார். விழாவில் தன்முனைக் கவிதைகளின் தந்தை, தன்முனை குழும நிறுவனர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் கார்த்திகை மாத தன்முனைக் கவிதை நூல்கள் மூன்றினை வெளியிட்டார். தமிழக கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் தன்முனைக் கவி கார்த்திகை, அமெரிக்கா வாழ் கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்களின் தன்முனைத் தளிர் கார்த்திகை, பாவலர் கல்லை மலரடியான் அவர்களின் தன்முனை மலர் கார்த்திகை எனும் நூல்களும் வெளியிடப்பட்டன. நூல்களை தன்முனைக் குழுமத்தின் செயல் தலைவர் ந.வேலாயுதம், இணைச்செயலர் புதுகை ஆதீரா , செயற்குழு தலைவர் கண்மணி கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தன்முனைக் கவிதைகள் குழும தலைவர் அவர்களின் பிறந்தநாளுக்கு கவிஞர்களால் சிறப்பு செய்யப்பட்டது. தன்முனைக் கவிதைகள் அறிமுகப்படுத்தி எட்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் அயல்நாடுகளில் தன்முனைக் கவிதைகளை பெருமளவில் எழுதும் கவிஞர்கள் நூல்களை வெளியிட்டு வருவதும் தமிழ் கவிதை இலக்கியத்தில் குறுங்கவிதைகளின் வளர்ச்சி கோலோச்சி வருகிறது என்றும் அதன் நிறுவுனர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் தெரிவித்தார். மேலும் தன்முனைக் கவிதைகள் கூட்ட நிகழ்வுகளை தொடர்ந்து தமிழ்நாடு இ.பேப்பர்.காம் தமது இணைய இதழில் வெளியிட்டு வருவதையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.
விழாவில் கவிஞர்கள் கண்மணி கண்ணன், வேலாயுதம்.ந.,க.குணசேகரன், புதுகை ஆதீரா ,திருமதி அருள்செல்வி, தன்முனை மகளிர்அணி தலைமைக் கவிஞர் டாடோ சந்திரகலா,திரு.இரா. கார்த்திகேயன் , கவிஞர் அகவலன், நூலேணி பதிப்பக உரிமையாளர் கன்னிக்கோவில் இராஜா, திருமதி விஜயலட்சுமி ,ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?