அறுசீர் மண்டிலம்.
வேற்றுமை இன்றி
வாழ்வோமே
வேதனை போக்கிச்
சூழ்வோமே
சாற்றிடும் நன்மை
செய்வோமே
சந்தன நன்மை
நெய்வோமே!
ஆற்றிடும் செயல்கள்
நலமாக
அவரவர் குணத்தில்
புரிவோமே
போற்றிடும் வண்ணம்
உழைப்போமே
பொலிந்திடும் அன்பில்
திகழ்வோமே!
அன்பிலே தோய்ந்து
வாழ்வோமே
அன்பிலே என்றும்
சூழ்வோமே
பண்பினைக் காட்டி
மகிழ்வோமே
பாசமாய் வாழ்வில்
திகழ்வோமே!
இன்புடன் வாழ்வில்
நடப்போமே
ஈகையைச் செய்து
மகிழ்வோமே
வன்முறை இன்றி
வாழ்வோமே
வளத்தினைக் கூடிச்
சூழ்வோமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%