அன்னையும் பிதாவும்

அன்னையும் பிதாவும்


தாயின் நாபியில் வளர்ந்தோம் அவளின் 

மடியில் உலகம் பார்த்தோம் 

தந்தையின் கரங்களைப் பிடித்து நடந்தோம் அவர் தோளில் அமர்ந்து மகிழ்ந்தோம் 

அழு குரல் கேட்டாலே பசியோ என்று பால் கொடுப்பவள் தாய்  

சோர்ந்து இருந்தாலும் மனக்கவலையோ என்று சிந்திப்பவர் தந்தை 

அன்பைத் தவிர வேறு எதுவும் அறியாதவள் தாய் 

அகிலத்தை நமக்கு உணர்த்துபவர் தந்தை 

பள்ளிக்குச் சென்று பரவசமுடன் திரும்புவதை எதிர்பார்ப்பவள் தாய் நல்ல பணி கிடைத்து வருமானம் கிடைக்க வேண்டும் என்று ஏங்குபவர் தந்தை 

இருவரும் ஒருவரை மிஞ்சி ஒருவர் அன்பை செலுத்துபவர்கள் 

அன்பை செலுத்திய அவர்களை முதிய காலத்தில் ஆதரித்து மகிழ்வோம்.


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%