அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு: விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்: திருமாவளவன்
Sep 11 2025
72
    
சென்னை, செப். 10–
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில் கூறியதாவது:–
செங்கோட்டையன் தன் இயல்பாக கட்சியின் ஒருங்கிணைப்புக்கு போராடுகிறார் என்றால், அதனை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அவரை (செங்கோட்டையன்) பா.ஜ.க. இயக்குகிறது என்றால், அது அண்ணா தி.மு.க.வுக்கு நல்லதல்ல, என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி யுள்ளோம். ஐயப்பட்டதைப் போல, அவருக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதை, டெல்லியில் அமித்ஷாவை அவர் சந்தித்ததன் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அண்ணா தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக் கொண்டே, அதனை கபளீகரம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அண்ணா தி.மு.க.வை தனியே போக விடாமல், கூட்டணியில் இணைத்தாலும், தனித்து செயல்பட விடாமல், கபளீகரம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்பதை அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உணரத் தொடங்கியிருப்பார்கள்.
எடப்பாடியால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை, அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் எந்த துணிச்சலில் சந்தித்தார்கள். அப்படியென்றால், அண்ணா தி.மு.க. மற்றும் அதன் தலைவரை பற்றி என்ன மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு அவர்கள் அண்ணா தி.மு.க.வை நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு மேலும் அண்ணா தி.மு.க. பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி என்று முடிவெடுத்தால், அதற்கு அண்ணா தி.மு.க. தொண்டர்களே பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அவருக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?