அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி - மு.க.ஸ்டாலின்

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி - மு.க.ஸ்டாலின்



நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சென்னை,


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-


தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் (SIR) எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!


வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.


அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் எஸ்.ஐ.ஆர் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘இவன் என் பழைய நண்பன்’ - சந்திரபாபு நாயுடு பெருமிதம்


அமராவதி: ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (ஒருங்கிணைந்த ஆந்திரா) தனக்கு சொந்தமான அம்பாஸிடர் காரில்தான் (பதிவு எண் AP 09 G 393) பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தார்.


பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த காரை அவர் இப்போது பயன்படுத்துவதில்லை. அவருடைய ஹைதராபாத் வீட்டில் உள்ள அந்தக் காரை நன்கு பராமரித்து வந்தனர். தற்போது மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில், அமராவதியில் குடியேறினார் சந்திரபாபு நாயுடு.


இந்நிலையில், அந்த அம்பாஸிடர் கார் ஹைதராபாத்தில் இருந்து அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த கார் அமராவதி வந்ததும், அதனுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.


‘இவன் என் பழைய நண்பன், பல ஆண்டுகள் இது என்னுடன் பயணம் செய்துள்ளது. பல நிகழ்வுகளை இது பார்த்துள்ளது. பல கார்கள் வந்தாலும், இது தான் என்னுடைய விருப்பமான நண்பன்’ என அந்த காரின் நினவுகளை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சந்திரபாபு நாயுடு.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%