43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்


அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம் கடந்த 43 நாட்களாக முடங்கியிருந்த அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


அமெரிக்காவில் அரசு துறைகளுக்கான பட்ஜெட் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முந்தைய அரசின் திட்டங்கள் நீக்கப்பட்டதால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் தரவில்லை. தற்போது செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு 47 பேரும் உள்ளனர். குறைந்தபட்சம் 60 பேரின் ஆதரவு தேவை என்பதால் மசோதா நிறைவேறாமல் கடந்த 43 நாட்களாக அரசுத் துறை முடங்கியிருந்தது.


இதனால் அரசின் பல்வேறு துறைகள் முடங்கிய நிலையில், விமானக் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், மருத்துவத்துறை உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்தனர். இருப்பினும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவர்களும் பணிக்கு வராததால் விமானப் போக்குவரத்து கடந்த சில நாள்களாக முடங்கியது.


இந்த நிலையில் தங்களின் முக் கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா செனட் அவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 222 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவானது. அடுத்ததாக பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா நிறைவேறிய 2 மணி நேரத்துக்குப் பிறகு கையெழுத்திடும் விழா நடந்தது.


ஓவல் அலுவலகத்தில் செலவீனங்களுக்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது பேசிய டிரம்ப், “கடந்த 43 நாட்களாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்காக கோடிக்கணக்கான டாலர்களைப் பறிக்க முயற்சித்த ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க அரசை முடக்கினர். இன்று மிரட்டி பணத்தை பறிப்பதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற தெளிவான செய்தியை நாங்கள் சொல்ல விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.


இந்த மசோதா ஜனவரி 30-ம் தேதி வரை அரசுக்கான நிதியுதவியை நீட்டிக்கும். இதனால் அரசின் அத்தனை துறைகளும் இனி செயல்பட ஆரம்பிக்கும். அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள், அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும்.


மசோதாவில் கையெழுத்திடும் முன்பு பேசிய டிரம்ப், நான் அமெரிக்க மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது. இடைக்காலத் தேர்தல்கள் வரும்போது ஜனநாயக கட்சியினர் ​​நம் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%