10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? - மத்திய அரசு தகவல்

10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? - மத்திய அரசு தகவல்

புதுடெல்லி:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தலில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித் துறையின் இணை அமைச்ச பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து மக்களவையில் எழுந்த ஒரு கேள்விக்கான எழுத்துபூர்வமாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ள்ளார். அதில், ”உலகில் அதிகம் கடத்தப்படும் பொருட்களில் தங்கம் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. அதைப் பிடிக்க நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன.


2024-25-ம் ஆண்டில் மொத்தம் 3,005 வழக்குகளில் தங்கத்தை புலனாய்வு அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு முந்தைய ஆண்டை விட பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இதன்படி, 2023-24-ம் ஆண்டில், 6,599 கடத்தல் வழக்குகளில் சுமார் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, இதுவரை கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பில் அதிகபட்ச தொகையாகும். இதுவே 2024-25-ம் ஆண்டில், இது 2,600 கிலோவாகக் குறைந்துள்ளது.


2023 நிதியாண்டில், 4,343 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டில் மற்றும் 2021 நிதியாண்டில், இந்த பறிமுதல் முறையே 2,172 கிலோ மற்றும் 1,944 கிலோவாக இருந்தது. விலை அடிப்படையில், தங்கம் இறக்குமதி 2024ம் ஆண்டில் 58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது, 2023-ம் ஆண்டில் 42.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022-ம் ஆண்டில், இந்த விலை மதிப்பற்ற மஞ்சள் உலோகமான தங்கத்தின் இறக்குமதி 36.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2021-ம் ஆண்டில் இது 55.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.


கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் பெருவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது முறையே 5.21 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 4.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. இந்தியாவில் தங்க சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் வரும் ஆண்டுகளில் அதன் இறக்குமதி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%