
ஹாங்சோ:
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது.
இதில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உதிதா துஹான், டங்க் டங்க் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர்.
மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, தவுடம் சுமன் தேவி, ஷர்மிளா தேவி, ருதாஜா தாதாசோ பிசல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானுடன் இன்று மோதுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%