திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை முதற் சோமவாரம் 1,008 சங்காபிஷேகம் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டு வழிபட்டார்
மயிலாடுதுறை நவ,20 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. ஆயுள் விருத்திக்காக உக்ரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இக்கோயிலில் கார்த்திகை மாதம் முதல்சோமவாரத்தையொட்டி யாக சாலையில் 1,008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளத்துடன் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள்,சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வண்ண மலர் களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டு, கோ பூஜை, கஜ பூஜை மற்றும் அசுவ பூஜை செய்து வழிபட்டார். தம்பிரான் கட்டளை சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை செயலாளர் விருதகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?