கோவில்பட்டி, நவ. 9
மாநில அளவிலான விநாடி-வினா போட்டியில் திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 11-வது மாநில அளவிலான விநாடி-வினா போட்டி நடந்தது. தென்மாவட்டங்களில் இருந்து மத்திய, மாநில மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்ட முறைகளில் பயிலும் 134 பள்ளிகளிலிருந்து 268, 11, 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, இந்திய வரலாறு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, புத்தகங்கள் மற்றும் நூலாசிரியர்கள், புவியியல் மற்றும் புராணங்கள் போன்ற பல்வேறு பாட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
முதலிடம்
போட்டியில், திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கே.நிதிஷ் ஆனந்த் மற்றும் எம்.சுதர்சன் ஆகியோர் முதலிடம் பிடித்து ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். 2-வது இடம் பிடித்த தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பி.காவியா ஸ்ரீ மற்றும் எஸ்.ஸ்வேதா ஆகியோருக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த சிவகாசி ஹயக்ரீவாஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ப.சேதுபதி மற்றும் ஆர்.முகுந்தன் ஆகியோருக்கு ரூ.10 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, சிகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாசரேத் மார்கோசிஸ் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி, திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர், திருநெல்வேலி லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி சங்கர வித்யாஷ்ரம் ஆகிய பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், கன்னியாகுமரி என்.எ.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர் கேசிஎடி சிதம்பரம் ஞானகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2,500-ம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?