தி. மு. க. வினர் என்றால் ஏவல் துறை. அப்பாவிகள் என்றால் அராஜகத்துறையா? திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் கேள்வி. த. வெ. க. தலைவர் திரு. விஜய் அவர்களின் பிரச்சார வேன் பறிமுதல் செய்யப்படும். இந்த இரண்டு செய்திகளும் இன்றைய அரசியலின் நிதர்சனத்தைத் தெரிவிப்பவையாக உள்ளன.
ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயம். இதுகுறித்து விசாரித்த மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனரின் அறிக்கை வெளியிடப் படாதது பல சந்தேகங்களுக்கு வித்திடுகிறது.
வீட்டின் பழைய பொருட்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி பாராட்டற்குரியது.
மடிப்பாக்கம் திருமதி. பிரபாவதி அவர்களின் சிறுகதை மனநிறைவை அளித்த படைப்பு. பாசத்தின் ஆணிவேர் குடும்ப உறுப்பினர் அனைவர் மனத்திலும் ஆழமாக ஊடுருவி உள்ளதை படம்பிடித்து காட்டியுள்ள பாசிட்டிவ் narration. அருமை.
பல்சுவைக் களஞ்சியப் பகுதியின் எட்டு ஜோக்ஸ்களும் A க்ளாஸ். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
பழம் சிறந்ததா பழச்சாறு சிறந்ததா? கட்டுரை சிறப்பு.
மருமகனுக்கு மரண தண்டனை வழங்கிய சேதுபதி மன்னனின் வரலாறு நீதியின் ஆட்சியை நிலைநிறுத்திய மாண்பை அழகாக விவரித்துள்ளது. தான் மகனையே தேர்காலில் இட்டு பசுவுக்கு நீதிமுறை செய்த மனுநீதிச் சோழன், தன் தசையே அரிந்து கொடுத்து பருந்துக்கு பரிவு காட்டிய சிபி சக்கரவர்த்தி வாழ்ந்த வரலாறுகளும் நம்மிடையே உள்ளன.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றிகள்.
P. கணபதி
பாளையங்கோட்டை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?