வாசகர் கடிதம் (P. கணபதி.) 25.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி.) 25.08.25


வாசக சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய (25.08.2025) தமிழ்நாடு இ இதழ் விருந்தில்..........


நிபந்தனைகளை ஏற்கா விட்டால் காஸா நகரம் அழிக்கப்படும். இஸ்ரேல் எச்சரிக்கை என்பது செய்தி. மக்கள், குழந்தைகள், செய்தியாளர்கள் என எல்லோரையும் கொன்றழித்து விட்டார்கள். அங்கு மேலும் அழிப்பதற்கு என்ன இருக்கிறது.


AI தொழில் நுட்பத்தை முன்னிட்டு இளம் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம் என அமேசான் நிறுவன உயரதிகாரி ஒருவர் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. இது கார்பொரேட் பிரச்சினை மட்டுமல்ல பல இளைஞர்களின் மண வாழ்க்கையையே பாதிக்கும் சமூகப் பிரச்சினை. குறிப்பாக இந்தியாவிற்கு. 


பதவி பறிப்பு மசோதாவை ஆதரித்து கிட்டத்தட்ட அனைத்து வாசகர்களும் வாசகர் கடிதத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த மசோதா குறித்த இக்கருத்துக்கள் The best political activism என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தனது உரையில் பிரதமரின் நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார். எதிர் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த அவரது உரை எதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. நன்று, நன்று. 


ஜெலன்ஸ்கியின் இந்திய வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அடுத்த கட்ட உலக அரசியல் காட்சி. வையத் தலைமை கொள்ளும் இந்திய அயலுறவுக்கு மற்றும் ஒரு மாட்சி. 


சுமார் 500 ஆண்டுகாலம் மட்டுமே வரலாறு கொண்ட அமெரிக்கா பல வரலாற்றுச் சின்னங்களைப் பாத்துகாத்து வருகிறது. செவ்விந்தியர்களுடன் நிகழ்ந்த போர்கள் குறித்த சின்னங்கள் இன்னும் பசுமை மாறாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் மொளசூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 1200 ஆண்டு பழமையான கொற்றவை சிலை பற்றிய செய்தி முக்கியம் பெறுகிறது. அரசு ஆவன செய்து பாதுகாக்க வேண்டியது அவசியம். கடமை. 


மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 கோடியே 88 லட்சம் கர்நாடக அரசு செலவழித்துள்ளதாம். நடிகை தமன்னா அவர்கள் இரண்டு ஆண்டுக்கு 6.2 கோடி ரூபாய்க்கு விளம்பர மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கவனம் பெறுகிறது. என்ன செய்வது. விளம்பரம் தான் வணிகத்தின் ஆக்சிஜன். பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது. 


"செருப்பில் புகுந்த கல்லும், வெறுப்பில் சொன்ன சொல்லும் கடைசி வரை உறுத்திக்கொண்டே இருக்கும்". ரவுசு ரமணியின் குரலாக திரு. J. ராஜகோபாலனின் கருத்து நூற்றில் ஒரு வார்த்தை. சபாஷ்.


மறைந்த சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் கட்டுரை சிறந்த ஒரு படைப்பு. இறை பக்தி, உழைப்பு, நட்பு, தன்னம்பிக்கை கொண்டு நிறை வாழ்வு வாழ்பவர் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்துவார்கள் என்பதற்கு இலக்கணம் தேவர் அவர்களின் வரலாறு. அருமையான கலைப்பதிவு. நன்றியும். பாராட்டும். 


திருமதி. உஷா முத்துராமன் அவர்களின் உருவம், அருவம் குறித்த அழகான கவிதை "உருவமும், அருவமுமே வாழ்வின் முழுமை" என்று உணர்த்தியுள்ளது அருமை, அருமை. Yin & Yang தத்துவத்தின் சாரம் இக்கவிதை. பாராட்டுக்கள் மேடம். 


திரு. விமலன் அவர்களின் வைகறை நேரத்தின் விவரிப்பு அருமை. நானும் காலைநடை செல்லும்போது இக்காட்சிகளைக் கண்டு ரசிப்பதுண்டு. அதை கவிதையை வாசிப்பது ஒரு மீள் சுகம்தான். Fine writing. 


நடேஷ் கன்னா அவர்களின் தொகுப்பு கவனம் ஈர்ப்பதாக உள்ளது. எல்லாமே five star தான். Good. 


அசோக்ராஜா என்றும் அசத்தல் ராஜாதான். விநாயகர் குறித்த அவரது தகவல் திரட்டு எனக்கு மிக மகிழ்வான, சுவையான விருந்துதான். 


கலாச்சார சீரழிவு களைகள் போல் பெருகும் இந்த கலிகாலத்தில் "சப்தமிடும் மௌனங்கள்" போன்ற தொடர்கள்...... என்ன சொல்ல.. No other go. 


பிரசுரமான படைப்புகளே மீண்டும் மீண்டும் பிரசுரமா வதை கொஞ்சம் கவனிக்கலாமே. இன்று "கூலிங் கிளாஸ் குமார்" 


இன்று தெய்வம் இதழ் வந்து சேர்ந்தது. கணபதியாகிய நான் விநாயகப் பெருமானின் பிரம்மாண்டங்களைப் படித்து பரவசமானேன். தெய்வம் இதழின் படைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். 


நன்றி. நாளை சந்திப்போம். 


P. கணபதி.

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%