
தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது சம்பந்தமாக சுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள்,
மளிகை கடைக்காரர்கள்
ஆகியோரை அழைத்து
கலந்துரையாடல் செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
புகையிலை பொருட்களை விட மிகவும் தீங்கு விளைவிக்கும் கஞ்சா, அபின் மற்றும் புதுவகை ரசாயன கலவைகளால் செய்யப்படும் மாத்திரைகள், போதை ஊசிகள் போன்றவை
தமிழகத்தில் இளைஞர்களை குறி வைத்து கடத்தி வரப்படுவதாக செய்திகள் வருகின்றன.
புகையிலை பொருட்கள் காலம் காலமாக நம் நாட்டில் பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. இப்போது நமது மாநிலத்தில் அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
புகையிலை பொருட்களை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் போதை வஸ்துகள் விநியோகத்தை முதலில் தடுக்க வேண்டியது அவசியம். குட்கா வேட்டையை நடத்துவதற்கு பதில் கஞ்சா வேட்டையை நடத்தலாம்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக ரயிலில் முன்பதிவு செய்ய முற்பட்டவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
முன்பதிவு தொடங்கி பத்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று விட்டன.
500 ரூபாய் டிக்கெட்டை 5000ரூபாய் கொடுத்தாவது வாங்கி குடும்பத்துடன் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்ற வெறி சென்னை வாழ் மக்களுக்கு இரத்தத்திலேயே ஊறிப் போய்விட்டது. அதன் காரணமாகத்தான் தனியார் பேருந்துகள் பல மடங்கு டிக்கெட் விலையை ஏற்றி ஊழல் செய்கின்றன.
மதுரையில் நடைபெறப் போகும் தவெ கழகத்தின்
மாநாடு நாட்டு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு தேர்தலில் போட்டியிடப்போவதாக
கூறும் நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் எப்படிப்பட்ட ஆதரவை அளிக்கப் போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
********
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?