வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 10.09.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 10.09.25

( 10.09.25 )

                      ****

வணக்கம் ! நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட கலவரம் அந்த நாட்டையே பற்றி எரிய செய்திருக்கிறது. 


காவலர்களால் கலவரத்தை அடக்க முடியாமல் போனதால் ராணுவம் வரவழைக்கப்பட்டு அதனால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பத்து 

பதினைந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.


இதனால் மேலும் ஆவேசம் அடைந்த மக்கள் கூட்டம் பாராளுமன்றத்துக்கும், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்திருக்கிறது. ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கின்றன.


மக்கள் சட்டென்று கோபப்படும் பிரச்சினைகளில் சட்டத்தினால் மட்டுமே சாதிக்க முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது.


காவல்துறையையும் ராணுவத்தையும் வைத்து கலவரத்தை கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்த நேபாள பிரதமரும் மந்திரிகளும் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று உயிர் தப்புவதற்காக ஹெலிகாப்டர்களில் பறந்து இருக்கின்றனர்.


இந்த சம்பவம் அனைத்து நாடுகளின் நிர்வாக தலைவர்களுக்கும் ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக வங்கதேச பிரதமர் நாடு விட்டு நாடு தப்பிச்சென்று அண்டை நாட்டில் அடைக்கலமாகி இருக்கிறார்

என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது.


இதன் பிறகாவது 

மற்ற நாடுகளில் நிர்வாகிகள் விழித்துக் கொள்ளுவது காலத்தின் கட்டாயம்.


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%