இண்டியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு
இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து இண்டியா கூட்டணி வேட்பாளராக திருச்சி சிவா அல்லது மயில்சாமி அண்ணாதுரை என்று ஒரு நாள் பரபரப்பு வெளிச்சத்தில் இருவர்
பெயர்களும் புகழ் உச்சம் பெற்றன.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இதெல்லாம் சகஜம் தானே! No harm...
எப்படியோ உயர்ந்த பதவிக்கான வேட்பாளர் தேர்வு பிரச்னை எதுவும் அரங்கேறாமல் இனிதே முடிவடைந்தது.
அந்த அளவுக்கு மகிழ்ச்சி தான்!
பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவு துறை அமைச்சர் சந்திப்பு.
உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் இந்தியா --சீனா பேச்சு வார்த்தை
அதிரடி மன்னர் டிரம்ப்புக்கு சரியான
நெருக்கடி.
இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தங்களுக்குள் பரஸ்பரம் நேசத்துடன் கை குலுக்கி கொண்டால் உலக அமைதிக்கே அது வழி வகுக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சுமுக நிலை என்றென்றும் தொடரட்டும். அனைத்து நாடுகளும் இதை உணர்ந்து செயல் புரியட்டும்!
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றார் ராஜஸ்தானை சேர்ந்த
மாணிகா
விஸ்வகர்மா.
அழகு என்பது புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்ச அழகி தேர்வு செய்யப் படுகிறார் என்று உணரும் போது சந்தோஷம் பெருக்கெடுக்கிறது.
ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவிற்கு 12 மணி நேரம் ஆனால் ஏன் சுங்கக் கட்டணம்.
உச்ச நீதிமன்றம் கேள்வி.
இந்த நிலைமை கேரளாவில் மட்டும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கே.பானுமதி நாச்சியாரின் ஊர்மிளை கட்டுரை.
தெளிந்த நடை...
தேர்ந்த சொற்றொடர்.
மிகவும் ரசித்தேன்.
இருதய நோய் மருத்துவர் எஸ்.ஐ. பத்மாவதி பற்றிய
ரமா ஸ்ரீனிவாசன்
கட்டுரை மிகவும் பயனுள்ளது.
வாசக உறவுகளின்
அகமும் புறமும்
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு இ பேப்பர் எடுத்து வரும் தொடர் முயற்சிகள் மிகவும் மெச்சத்தக்கது.
இதை நாம் எல்லோரும் உணர்ந்து
உருப்படியாக சிந்திக்க வேண்டும். உயர் உள்ளத்தில் செயல் புரியவும் வேண்டும்.
மனசாட்சியின் குரலுக்கு செவி மடுப்போம்!
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் செய்தி ரசிகப் பெருமக்களுக்கு கற்கண்டு! படம் வெளியாகும் நேரம் கூடுதல் பரபரப்பு நிச்சயம்.
பல்சுவை களஞ்சியம்
அசத்தல் அட்டகாசம் அற்புதம் ஆனந்தம்...!
வெளியாகி இருந்த கவிதைகள் அனைத்தும் சொற்சுவை பொருட் சுவை இணைந்து
சொக்க வைத்தன.மனதை
செழிக்க வைத்தன.
தமிழ் நாடு இ பேப்பரின் இந்த அற்புதமான சேவை என்றென்றும் தொடரட்டும்!
வாசக உறவுகளின்
வளமார்ந்த ஆதரவு
என்றென்றும் கொடி கட்டட்டும்!
பி.வெங்கடாசலபதி
தென்காசி
.