நண்பர் பி.பூதத்தான்
உழைப்பால் உயர்ந்தவர்.சொன்னது தான் தாமதம்...
தெய்வம் இதழுக்கு சந்தாதாரராகி விட்டார். அவரைப் பற்றி குறிப்பிட இது மட்டும் காரணம் இல்லை. அவர் மனந்திறந்து சொன்ன கருத்து தான் இங்கே முக்கியம்.
" தெய்வம் மாதிரி
உண்மையான ஆன்மீக பத்திரிகைக்கு தயக்கம் எதுவும் இல்லாமல் தாராளமாக ஆதரவு தர வேண்டும்.
இன்றைய மனித வாழ்வின் அவலங்களை யெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது,
ஆன்மீக கருத்துக்கள் மக்கள் மனதில் இன்னும் தீவிரமாக விதைக்கப் பட வேண்டும். இல்லையேல் அதி நவீனம் என்ற பெயரில்
நச்சு எண்ணங்கள் விதைக்கப் பட்டு பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும். அதனால் தான் தெய்வம் இதழுக்கு
எல்லோரும் ஆதரவு அளித்து வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
நண்பரின் இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்ததால் உங்களிடம் பகிர்ந்து மகிழ்கிறேன்.
விரிந்த உள்ளம் உடையவர்களால் தான், இப்படி யெல்லாம் சிந்தித்து விரிவாக பேச முடியும்
.பண்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்?
என்று கேட்க தோன்றுகிறது!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்
சி.பி.ராதாகிருஷ்ணன்
பாஜக வேட்பாளராக தேர்வு.
சரியான ராஜ தந்திர தேர்வு!
திமுக வுக்கு ஒரு வித
திணறலை அல்லது
தலைவலியை கொடுத்து விட்டார்கள்.
இன்னும் சரியாக சொன்னால் சரியான செக்!
அரசியல் ஆர்வலர்களுக்கு
ஆர்வம் ஊட்டும் சுவாரஸ்ய ஆட்டம்!
என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்!
ரூ11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை திறந்து வைத்தார் பிரதமர்.
முன்னேறிய நாட்டுக்கு
( Developed Country)
முக்கிய அடையாளங்களில் ஒன்று சாலை மேம்பாடு என்பதை உணர்ந்து மிகவும் கவனமுடன் ஆட்சி புரிந்து வரும் பாஜக வுக்கு பாராட்டு சொல்லியே ஆக வேண்டும். பெருமைக்குரிய வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே இந்த சாலை மேம்பாடு
காரியத்தில் கன உஷாரானது, ராயல் சல்யூட்டுக்கு உரியது என்று உரத்து சொல்லி
ஒரு ஓ கூட போடலாம்.
தப்பில்லை!
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு...
என்ன தான் அங்கே நடக்கிறது என்று தலையைப் பிய்த்துக் கொள்ளும் அரசியல் ஆர்வலர்களும் இருக்கிறார்கள்.
மெய்யுணர்வு பெற்றோருக்கு மேலுலகம் கைக்கெட்டும் தூரத்தில் தான் என்பதை மையக் கருத்தாகக் கொண்ட குறளை உள் வாங்கும் போது உள்ளம் தெளிந்தது மாதிரியான ஃபீலிங்
கிடைத்தது உண்மை!
சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும்.விஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவுரை.
சோதனைகளை சாதனைகளாக்கி தான் ராஜ்யசபா எம்.பி.
ஆனதை மனதில் வைத்து சொல்கிறாரோ?
நலம் தரும் மருத்துவம் பகுதியில் திங்கள் கிழமை மாரடைப்புக்கு உகந்த நாள் என்று ஆராய்ச்சி பூர்வமாக அலசி யிருந்தது அருமை அருமை!
பன்முகம் பக்கங்கள்
அடடா... ஆனந்தம் அள்ளியது.
சுவையான தகவல் களஞ்சியமாக சுடர் விட்டு தெறித்தது.
தமிழ் நாடு இ பேப்பரின் வீறு கொண்டெழும் சிங்கப் பாய்ச்சல் அபாரம் அபாரம் சார்!
ஒரு அன்பான வேண்டுகோள்:
உங்கள் டீமுக்கு தாமதம் செய்யாமல் உடனே திருஷ்டி சுற்றிப் போடுங்கள்!
பி.வெங்கடாசலபதி
தென்காசி