வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 05.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 05.09.25



அன்பான வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்!


கோவை வாசக நண்பர் திரு. சிவசங்கரும் நானும் 

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வெளியீடான அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் எண்ணிக்கையை வாசகர்களே முன் வந்து உயர்த்தி காட்டி 

உயர் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்ற புதிய கருத்தின் மையப் புள்ளியில் எல்லாம் வல்ல இறைவன் கருணையால் இணைந்தோம்.

எந்தவொரு சுயநல பிரதிபலனையும் எதிர்பாராத இந்த வேள்விப் பயணத்தில் 

எங்களுக்கு கிடைத்த 

பேருணர்வு மிக்க பெருமை மிகு அனுபவங்கள் அற்புதம்... அற்புதம்..


இதில் குறிப்பிடத்தக்க முக்கியமான கருத்து என்னவென்றால், தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தில் இருந்து யாரும் இதுவரை எங்கள் இருவரிடமும் பேசியதும் கிடையாது.

தனிப்பட்ட முறையிலான மெசேஜ் தொடர்பும் கிடையாது.

நாங்களும் இதுவரை அவர்களில் யாரிடமும் இதுவரை தொடர்பு கொள்ள வில்லை.

முயன்றதும் இல்லை.

வாசகர் கடிதம் எழுதுவது என்ற இணைப்பு மட்டும் தொடர்கிறது.


இதையெல்லாம் ஏன் 

விளக்கி சொல்கிறேன் என்றால்... எங்கள் சுயநலன் எதையும் கருதி, எதிர் பார்த்து

இந்தப் பணியில் நாங்கள் இறங்க வில்லை.


சமூக நலன் கருதி உழைப்பின் மேன்மையை உறுதிப் படுத்தும் வகையில் 

சிறப்பாக இயங்கி வரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சிக்கு வாசகப் பெருமக்கள் நேரடியாக ஈடுபட்டு 

இங்கே ஒரு ஆரோக்கிய புரட்சியை ஏன் உண்டு பண்ணக் கூடாது? என்ற எண்ண உந்துதல் தான் காரணம்.


லட்சக்கணக்கான வாசக பெருமக்கள் இலவசமாக தமிழ் நாடு இ பேப்பரை தினந்தோறும் வாசித்து மகிழ்கிறார் 

கள். இருபது பக்கங்கள் கொண்ட பேப்பரில் சுடச்சுட செய்திகள் நடுநிலை தாங்கி வெளிவருவது

மகா சிறப்பு. இது மட்டுமா?

வாழ்க்கைக்குத் தேவையான பல்துறை சம்பந்தமான பலசுவை 

தகவல்கள், இலக்கிய படைப்புகள், பிஞ்சு உள்ளங்களை பண்படுத்தும் சின்னஞ் சிறு பிள்ளைகளுக்கான படைப்புகள்... என்று 

செழிக்க செழிக்க நமக்கு அளித்து வரும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தினரை சந்தோஷப்படுத்தி 

சக்திப் படுத்துவது நமது கடமை அல்லவா?


அதிகாலையில் அலைபேசியில் இ பேப்பர் வந்ததும்,

ஜஸ்ட் லைக் தட்டாக 

மேலோட்ட லயத்தில் பத்திரிகையை திருப்பிப் பார்த்து விட்டு கடந்து போகலாம்... தப்பில்லை... ஆனால் அது ஒரு வகையான சராசரித் தனம்.

திரு சிவசங்கர் குறிப்பிட்டது மாதிரி 

அந்த மாதிரியான வாசிப்பில் சாரம் இல்லை...அதனால் சக்தியும் இல்லை.

பெறற்கரிய

ஆறறிவு பெற்றவர்கள் நாம். நம்மால் தான் 

பத்தோடு பதினொன்றாக இல்லாமல் புதுமையாக யோசிக்க முடியும். அப்படி சிறப்பாக யோசித்ததை செயல் படுத்திக் காட்டவும் முடியும்.


அதனால் தான் கோவை வாசக நண்பர் சிவசங்கர் அவர்களும் நானும் இந்த விஷயத்தில் ஒன்றானோம்.

முனைந்து முயற்சி செய்தால் முடியாதது என்று இங்கே எதுவும் கிடையாது என்பதில் உறுதியானோம்.

தமிழ் நாடு இ பேப்பரின் வாசக உறவுகள் எல்லோரும் 

உயர்ந்த மனம் கொண்டவர்கள் என்பதில் தெளிவானோம்.

தொடர்ந்து சளைக்காமல் இயங்கினால் கல்லும் கனியாகும் என்பதில் 

ஒன்றானோம்.


விளைவு?


இன்று வெளிச்சம் மெல்ல மெல்ல விரியத் தொடங்கி இருக்கிறது.


படைப்பாளர்கள் இந்த விஷயத்தில் ஆர்வமுடன் முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ரிசல்ட் கிட்டியிருக்கிறது.

மெய் வருத்தக் கூலி தரும் என்பது மெய்யாகி இருக்கிறது. எங்கள் இருவருக்கும் தெரிந்து 

ஐந்தாறு படைப்பாளர்கள்

தெய்வம் இதழின் சர்குலேஷன் உயர்வுக்கு தனிக் கவனம் செலுத்தி 

ஓடோடி உழைக்கத் தொடங்கி விட்டார்கள்.

வாசகர்கள் சந்தாதாரராகிக் கொண்டே சிறிய அளவில் சம்பாத்தியமும் பண்ணிக் கொள்ளக் கூடிய அளவுக்கு 

ஆசிரியர் அறிவித்துள்ள பயனுள்ள திட்டம் 

'டேக் ஆஃப் ' ஆகி விட்டது. 


இந்த வேள்விப் பயணத்தை விரைவில் வெற்றிப் பயணம் ஆக்கும் வல்லமை நமது படைப்பாள பெருமக்களிடமும் 

வாசக பெருமக்களிடமும் தான் இருக்கிறது.


ஆகவே அன்பானவர்களே!

தாமதிக்காமல் தெய்வம் இதழ் எண்ணிக்கையை 

நாம் உள்ளன்புடன் 

விளையாட்டாக உழைத்தாலே போதும்.

வெகு விரைவில் தெய்வம் இதழின் சர்குலேஷனை வியந்து போற்றும் அளவுக்கு உயர்த்திக் காட்டலாம்.

வாருங்கள் நண்பர்களே!

ஆசிரியர் குழுமத்தினரிடம் இது சம்பந்தமாக பேசுங்கள் நண்பர்களே!


வெற்றி நிச்சயம் 

விளைச்சல் நிச்சயம் 

நல் வினைகள் நிச்சயம்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%