ஆசிரிய தலைமைக்கு அன்பு வேண்டுகோள்...
தமிழ் நாடு இ பேப்பரில் தொடர்ந்து வெளியாகும் பகுதிகள்
வாசகர் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக நலம் தரும் மருத்துவம்,
தினம் ஒரு தலைவர்கள்
பகுதிகள்...
இதுவரை வெளிவந்த
பக்கங்களை யெல்லாம் தொகுத்து
தமிழ் நாடு இ பேப்பர்
பதிப்பகம் சார்பாக நூல்களை அச்சிட்டு, அனைத்து வாசகர் இல்லங்களிலும்
இடம் பெற வைக்கலாமே!
அப்படி வெளியாகும்
பட்சத்தில் தமிழ் நாடு இ பேப்பர் பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களுக்கும்
'முதல் புக்கிங்' என்னுடையது தான் என்பதை, இப்போதே அட்வான்ஸாக பதிவு செய்து கொள்கிறேன்.
காரணம்... அந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
உள்ளத்திற்கு உற்சாகம் ஊட்டும் விதமாக இருக்கிறது.
மீண்டும் ஆசிரியர் குழுமத்தினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்... நன்றிகள்!
ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி கைதானால்
பிரதமர், முதல்வர்கள்
அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்கள் அவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா.
எல்லோரும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதா நகலை கிழித்
தெறிந்து எதிர்ப்பை காட்டி இருக்கின்றன.
இதிலிருந்தே இந்த மசோதாவின் அவசியமும் முக்கியத்துவமும் புரிகிறதே! மத்திய அரசுக்கு ஓ போட்டு பாராட்டி மகிழ்வோம்!
முக்கிய மசோதாக்களை கூட்டத் தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா?
கேட்கிறார் கனிமொழி.
முன்னரே தாக்கல் செய்தால், மழைக் கால கூட்டத் தொடர் முழுவதையும் எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்க் கட்சிகள் கூச்சமில்லாமல் கூச்சல், கோஷம் கோபம் என்று பாழ்படுத்தி விடுவார்களே!
மக்களவையின் மாண்புகளையும்
விலை மதிக்க முடியாத பொன்னான நேரத்தையும் சேதப்படுத்தி சின்னா பின்னமாக்கி விடுவார்களே!
புதிய மசோதா குறித்து
ராகுல் கருத்து கூறும் போது, இந்தியா பின்னோக்கி செல்கிறது என்கிறார்.
அரசியல் வாதிகளின் குற்றங்கள் குறையும் போது தீமைகள் தான் பின்னோக்கி செல்லும்.
நன்மைகள் நாட்டை முன்னோக்கி நகர்த்தும்.
ஹரணியின், 'பாரதி நகர் காமராஜ் நகர் விரிவாக்கம்' கதை நல்ல மெசேஜ்!
கோமளவல்லியின் காசி யாத்திரை பயணக் கட்டுரை ஜோர் ஜோர், சார்!
ஆகஸ்ட் 30 ல் நாதக வின் மரங்களின் மாநாடு நடக்கும் இடத்தைப் பார்வை யிட்டார் சீமான்...
முதல்வரை சீமான் சந்தித்ததில் இருந்து ஆட்சி எதிர்ப்பில்
அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார் என்று எல்லோரும் சொல்வது உண்மை தான் போலிருக்கு!
ஆடு மாடு மரம் என்று பாதை மாறி பரபரப்பை உண்டு பண்ணலாம் என்று நினைக்கிறார் போலும்! சபாஷ் சபாஷ்!
கோபி பச்சமுத்து எழுதிய சிவ தகவல்கள் அருமை அருமை!
சேதுபதி தஞ்சிராயர் வரலாறு நெஞ்சம் நிறைத்தது.
இருண்ட அறைக்குள் 14 ஆண்டுகள்...
24 ஆண்டுகள் சிறை வாசம்... அந்தக் கால தியாகத்தின் மகிமையை புரிந்து கொள்ள முடிந்தது.
கவிதைகள் அனைத்தும், அடடா ஆனந்தம்... அற்புதம் சார்!
வாசகர் உள்ளம் உணர்ந்து ஒவ்வொரு பக்கத்தையும் செதுக்கி சீராக்கும்
தமிழ் நாடு இ பேப்பரின் புகழ் எட்டுத் திக்கும் ஓங்கி ஒலித்து
ஜொலிக்கட்டும்! ஜெயம் காணட்டும்!
இந்த வாசகர் கடிதத்தை எழுதும் போது என் சகதர்மிணி சதா தொண தொணத்ததை இங்கே கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.
'அடுத்த தெய்வம் புக் எப்போ வரும் ங்க?'
அவள் கேட்டது ஒன்றும் முக்கியம் இல்லை. அந்த ஆர்வம் இருக்கிறதே...அது தான் தெய்வம் பத்திரிகையின் மேன்மையை உணர வைத்தது.
இந்தத் தரமான தெய்வம் இதழுக்கு
சிறப்பான எதிர் காலம் நிச்சயம் இருக்கிறது.
உண்மை யிது... வெறும் புகழ்ச்சி இல்லை...,!
பி.சிவசங்கர்
கோவை