வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 11.09.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 11.09.25


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் அன்பானவர்களுக்கும்

அன்பான வாசக சொந்தங்களுக்கும் 

அன்பான வணக்கங்கள்...


அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகர் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து 

மணம் வீசத் தொடங்கி 

இருக்கிறது.


எறும்பின் பாதப் பதிவுக்குக் கூட அதிர்வலைகளும் 

அழுத்தத் தாக்கங்களும் இருக்கும் போது 

தமிழ் நாடு இ பேப்பரின் வாசக உறவுகளின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடான எழுச்சி க்கு விளைச்சல் இல்லாமல் போகுமா என்ன...!


நேற்றைய வாசகர் கடிதத்தில் தென்காசி திரு. வெங்கடாசலபதி அவர்கள் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு 

இருந்த மாக்சிம் கார்க்கி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.


தன்னை ஒவ்வொரு நாளும் செதுக்கி சீர் படுத்தி செம்மையாக்கும் முயற்சியில் ஈடுபடுவது தான் உலகத்திலே புனிதமானது என்ற 

கார்க்கியின் சிந்தனை எப்பேர்ப்பட்ட சிந்தனை. அதைப் படித்த போது சிலிர்த்துப் போனேன் நான். 


ஆழ்ந்து யோசித்தால்,

அருள் தரும் தெய்வம் இதழுக்காக வாசக சொந்தங்கள் மனப்பூர்வமாக உள் இறங்கி வேலை செய்வது கூட தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் தரமான --

உயர்வான காரியமாகவே கருதத் தோன்றுகிறது.


தன்னைப் போல் பிறரை நேசிக்கும் தங்கக் குணம், இந்த மாதிரியான செயல் பாடுகளில் பொதிந்துள்ளதே!


தெய்வம் இதழ் இங்கே பரவலாக வாசிப்புக்கு

உள்ளாகும் போது 

முதலில் தனி மனித மேம்பாடு தானாகவே மலர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.


கண்ணுக்குத் தெரியாத இந்த மகா 

மாற்றம் அடுத்த கட்டத்துக்கு தானாகவே நகர்கிறது.


ஆமாம்...தனி மனித வளர்ச்சி, குடும்ப வளர்ச்சிக்கு பரிணாமம் பெறுகிறது. பிறகு?

சமுதாய மறுமலர்ச்சி யாக அடுத்த கட்டத்துக்கு அதீதமாக 

உயர்கிறது.


இந்த நுட்பமான மாற்றங்கள் எல்லாம் 

மேலோட்ட தரிசனத்தில் தெரிவதில்லை.

புரிவதில்லை. உற்று ஆய்ந்து உறுதியுடன் 

பார்வையை செலுத்தினால் தான் 

உள்ளுக்குள் நிகழும் பிரம்மாண்ட மாற்றத்தை உணர்ந்து 

ரசிக்க முடியும். மகிழ முடியும்.


இந்த சூட்சும ரசவாத வித்தையில் தேர்ச்சி பெறும் போது தான் மனிதன் மாமனிதனாக வெளிச்சம் பெறுகிறேன். நாளடைவில் தெய்வமாகவே ஆகி விடுகிறான் என்பது

தான் உண்மை.


அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்திடும் 

இந்த முயற்சி பயணத்தில் இவ்வளவு 

ஆக்கப்பூர்வமான ஆதாய சகாயங்கள் 

உள்ளன என்று உணர்ந்தாலே போதும். ஆகஸ்ட் மாத 

தெய்வம் இதழின் சந்தாதாரர் எண்ணிக்கையை தூக்கி நிறுத்தி விடலாம்.


ஆகவே அன்பான வாசக சொந்தங்களே!

புரிதலோடு புத்துணர்வும் நிச்சயம் உண்டு என்று நூற்றுக்கு நூறு நம்புங்கள்...

ஆளுக்கு ஐந்து பேர்களை தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் ஆக்கும் வேள்வி பயணத்தை வீறுமிக்க எழுச்சியுடன் தொடர்வோம்!


வெற்றி நிச்சயம் 

விளைச்சல் நிச்சயம் 

நல் விளைவுகளும் நிச்சயம்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%