
கூத்தப்பாடி மா.பழனியின் 'வளர்ப்பு' என்ற சிறுகதையை படித்து அதிர்ந்துப் போனேன். கதாசிரியர் இப்படி ஒரு சஸ்பென்ஸ் வைப்பார் என்று நினைக்கவே இல்லை. ஐயோ... பாவம் ஆண்கள்!
'பயனுள்ள விடுமுறை' என்ற தமிழ்ச் செம்மல் நன்னிலம் இளங்கோவனின் சிறுகதை சிறுவர்கள் விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. ஊர் சுற்றுவது மட்டுமே விடுமுறையின் நோக்கமாக இருக்கக்கூடாது என்பது நல்லதொரு பாடமாகும்.
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்' தொடர்கதை மனதை நெகிழ வைத்தது. பழைய காதலர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு போனில் பேசிக்கொள்வது ஒருவித லேசான சோகத்தை தந்தது.
'தெய்வங்களும்...வழிபாட்டு தினங்களும்' என்ற அசோக்ராஜாவின் கட்டுரை ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவர்களுக்கு ஒரு பயனுள்ள வழிக்காட்டி போல அமைந்திருக்கிறது. மிகச் சிறப்பான தொகுப்பு.
ஷஹீத் சிவராம் ராஜகுரு வரலாறு என்ற கட்டுரை சிவராம், ராஜகுரு போன்ற பெரிய மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த சுதந்திரம், இன்று அதே மக்களால் எவ்வளவு தவறாக பயன்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்தி சிந்திக்க வைத்தது.
எம்.பி.தினேஷின் சகிப்புத்தன்மையை பற்றிய கவிதை மிகச்சிறப்பு. காலையில் எழுந்ததும் 'உம்'மென்று இருக்கும் மனைவியிடம் 'நீ கொள்ளை அழகு' என்று சொல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாகும் என்று துவங்கிய இந்த கவிதை மொத்தத்தில் வாழ்க்கை முழுவதும் சகிப்புத்தன்மையுடன் வாழுங்கள் எந்நாளும் இனிமையாக இருக்கும் என்று முடிவடைந்தது நல்லதொரு வாழ்க்கைப் பாடமாக இருந்தது.
முத்துஆனந்த்தின் 'நேசியுங்கள்...நேசிக்கப்படுவீர்கள்' என்ற கட்டுரை எல்லோரிடமும் உண்மையான அன்புடன் நடந்துக்கொண்டால், நமக்கு நன்மையே கிடைக்கும் என்ற இனிய பாடத்தை கற்று தந்தது. இது எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான கட்டுரை.
நடேஷ்கன்னாவின் பனங்கற்கண்டு மருத்துவப் பயன்கள் உடல் நலத்திற்கு உதவும் கட்டுரையாக அமைந்திருந்தது. இதைப்போன்ற கட்டுரைகள் தமிழ்நாடு இ.பேப்பரை பயன் மிகுந்ததாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?