அன்புடையீர்
வணக்கம் 12. 9 .25 அன்று தமிழ்நாடு பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம். என்ற செய்தி அதிர்ச்சியாக படிக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைந்து எனக்கு உற்சாகத்தை கொடுத்தது.
நல்ல அருமையான திருக்குறளை பொருள்கள் படித்து மகிழ்ந்தேன். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த படங்கள் புல்லரிக்க வைத்தன.
தாமரை மலரின் அழகை ரசித்து இருக்கிறோம் ஆனால் அதில் நிறைய மருத்துவ ரகசியங்கள் உள்ளன என்பதை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து தெரிந்து கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஓலைச்சுவடி என்று சென்னை நூலகத்தில் முதல்வர் அவர்கள் ஒப்படைத்த செய்தி பெருமையாக படிக்க வைத்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சாவித்ரி தேவி முகர்ஜி என்ற அவருடைய கருப்பு வெள்ளை படமும் செய்தியும் மனதுக்கு சந்தோஷத்தை கொடுத்து படிக்க வைத்தது.
பல்சுவை களஞ்சியம் பகுதி அருமையாக இருந்தது அதில் வந்த மீம்ஸ் எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியுடன் கவலையை மறந்து சிரிக்க வைப்பது தான் உண்மை.
தெய்வீக அருள் தரும் ஆன்மிகம் என்ற பக்கத்தில் வந்த சமயபுரம் கோவிலில் மகாளய வழிபாடு மிகவும் அற்புதமான தகவல் நான் திருச்சியில் இருந்த நாட்களை எனக்கு மலரும் நினைவாக நினைக்க வைத்தது.
கலைஞர் அவர்களின் கனவு இல்லம் பற்றிய செய்தி மிகவும் அருமை. இந்தியாவில் மிகப் பெரிய குளோபஸ் சோலார் கண்காட்சி படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.
சுற்றுலா பக்கத்தில் வரும் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது இன்று ரயில் பயணம் மனம் நிறைந்த மகிழ்ச்சியும் கண்களுக்கு விருந்தும் என்று மிக அருமையான செய்தியை படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது பாராட்டுக்கள்.
உலாவி வந்த புலியை பிடிக்காததால் கிராமத்து மக்கள் ஆத்திரம் என்று கர்நாடகாவில் ஏழு வனத்துறை இன கூண்டில் அடைப்பு என்ற செய்தி அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது.
தஞ்சாவூரில் ஆயிரம் கிலோ கஞ்சா பொருட்களை எரித்து அழித்தது மிகவும் நல்ல தகவல் இதனால் போதைப் பொருள்கள் நடமாட்டும் கண்டிப்பாக குறையும்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் டிக் டாக் வகுப்பு அறிமுகம் செய்தது ஆச்சரியத்துடன் படிக்க வைத்தது. உலக செல்வந்தர் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன் என்று உலகச் செய்தியை மிக அருமையான தகவலாக சொன்னது பாராட்டுக்குரியது .
வெட்கத்துடன் ஆதவன் வருவதைப் பார்த்து ஆசையுடன் வெள்ளிக்கிழமை விடியலை நோக்கிக் கொண்டிருக்க அலைபேசியில் அற்புதமான தகவல்களை தாங்கிய தமிழ்நாடு இ பேப்பர் பார்த்தவுடன் மேலும் மகிழ்ச்சி அதிகமானது. இப்படி தினமும் மகிழ்ச்சி கடலில் நீந்த ஏவைக்கும் தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்