வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்

வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்

சென்னை:

வறுமையை ஒழிப்​ப​தில் இதர மாநிலங்​களுக்கு எப்​போதும் தமிழகம் முன்​னோடி​யாக திகழ்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.


இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் கடுமை​யான உழைப்பு காரண​மாக வறுமை ஒழிப்​பில் தமிழகம் இந்​தி​யா​வில் முதல் இடம் என்​னும் அணி​கலனைச் சூடி​யுள்​ளது. இதில், திமுக அரசு தொடங்​கிய 1967-ம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பை முன்​னிலை​யில் வைத்து மேற்​கொள்​ளப்​பட்ட நடவடிக்​கை​களின் வரலாறும் அடங்​கி​யுள்​ளது.


1974-ம் ஆண்டு ஜன.28-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி​வித்து முன்​னாள் முதல்​வர் மறைந்த கருணாநிதி ஆற்​றிய உரை​யில், குடியரசு நாள் விழா கூட கொண்​டாட முடி​யாத நிலை​யில் உள்ள குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்களுக்கு உணவு வழங்கி வரு​கிறோம் என்று குறிப்​பிட்​டார்.


தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆட்​சிப் பொறுப்​பேற்​றபோது, கரோனா பாதிப்பு இருந்த நிலை​யில் பொது​விநி​யோகத் திட்​டம் மூலம் அனை​வருக்​கும் தடை​யின்றி உணவுப் பொருட்​கள் வழங்க உத்​தர​விட்​டார்.


அதன்​படி 2022-ல் 2 கோடியே 7 லட்​சத்து 70,726 அரிசி குடும்ப அட்​டை​தா​ரருக்​கு, 14 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய கரோனா நிவாரணத் தொகுப்பு வழங்​கப்​பட்​டது. 2 கோடியே 8 லட்​சத்து 42,716 அரிசி அட்​டை​தா​ரர்​களுக்கு ரூ.4,000 வீதம் கரோனா நிவாரண உதவித்​தொகை 2 தவணை​களாக வழங்​கப்​பட்​டன.


தமிழகத்​தில் 37,328 நியாய​விலைக் கடைகள் செயல்​படு​கின்​றன. இவற்​றின் மூலம் 2 கோடியே 25 லட்​சத்து 93,654 மின்​னணு குடும்ப அட்​டைகளுக்கு உணவுப் பொருட்​கள் வழங்​கப்​படு​கின்​றன. தரம் மற்​றும் பராமரிப்​புக்​காக 10,149 நியாய விலைக் கடைகளுக்​கும், பாது​காப்​பான உணவுச் சங்​கிலி மற்​றும் சேமிப்​புக்​காக 2,059 நியாய விலைக் கடைகளுக்​கும் ஐஎஸ்ஓ சான்​றிதழ் பெறப்பட்டுள்ளன.


மேலும் 2,394 புதிய நியாய​விலைக் கடைகளை முதல்​வர் திறந்து வைத்​துள்​ளார். இது​வரை 10,661 நியாய விலைக்கடைகளில் யுபிஐ முறையைப் பயன்​படுத்தி ரொக்​கமில்​லாப் பணப்​பரிவர்த்​தனை நடை​பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


மிக்​ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகை​யாக ஒரு குடும்​பத்​துக்கு ரூ.6,000 வீதம் சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திருவள்ளூர் ஆகிய மாவட்​டங்​களில் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்ட 24 லட்​சத்து 78,229 குடும்​பங்​களுக்​கும் தூத்​துக்​குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதி​க​னமழை​யால் பாதிக்​கப்​பட்ட 6 லட்​சத்து 36,760 குடும்​பங்​களுக்கு தலா ரூ.6,000 வீத​மும் தூத்துக்​குடி, திருநெல்வேலி மாவட்​டங்​களில் உள்ள இதர வட்​டங்​களி​லும் தென்​காசி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களி​லும் கனமழையால் பாதிக்கப்​பட்ட 14 லட்​சத்து 58,164 குடும்​பங்​களுக்​குத் தலா ரூ.1,000 வீத​மும் நிவாரணத் தொகை வழங்​கப்​பட்​டது.


விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​களின் பல்​வேறு பகு​தி​களில் ஃபெஞ்​சல் புய​லால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு 5 கிலோ அரிசி பை, 1 கிலோ பருப்​பு, 1 கிலோ சர்க்​கரை ஆகியவை 7 லட்​சம் குடும்​பங்​களுக்கு வழங்​கப்​பட்​டன.


நடப்​பாண்டு ஒரு கிலோ பச்​சரிசி, ஒரு கிலோ சர்க்​கரை மற்​றும் ஒரு முழு கரும்பு அடங்​கிய பொங்​கல் பரிசுத் தொகுப்பு 1 கோடியே 94 லட்​சத்து 35,771 அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும், இலங்​கைத் தமிழர் மறு​வாழ்வு மு​காம்​களில் வசிக்​கும் குடும்​பங்​களுக்​கும் நியாய​விலைக் கடைகள்​ மூலம்​ வழங்​கப்​பட்​டன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%