ராயபுரம் மண்டலத்தில் ரூ. 1.90 கோடியில் உருது நடுநிலைப் பள்ளி: சேகர்பாபு திறந்தார்

ராயபுரம் மண்டலத்தில் ரூ. 1.90 கோடியில் உருது நடுநிலைப் பள்ளி: சேகர்பாபு திறந்தார்

சென்னை, செப் 1–


இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ராயபுரம் மண்டலம், வார்டு - 60, மண்ணடி, அங்கப்பன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 1.89 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். பின்னர், பள்ளி மாணவர்ளுக்கு இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.


இந்த பள்ளிக் கூடமானது, தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 6 ஆயிரத்து 118 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 4 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், மற்றும் அலுவலக அறை என 6 அறைகளும், முதல் தளத்தில் 6 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், மற்றும் உள்விளையாட்டு அறை என 7 அறைகளும் ஆக மொத்தம் 13 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%