ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை: தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Aug 17 2025
11

கொழும்பு, ஆக. 14–
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களுக்கு தலா ரூ. 1.75 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த 55 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ராமேஸ் வரம் மீனவர்கள் 7 பேரை தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?