ராஜஸ்தானில் தொடர் கனமழை; அணை நீர் ஊருக்குள் புகுந்ததால் பூமி இரண்டாக பிளந்தது: 2 கி.மீ நீளத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பீதி

ராஜஸ்தானில் தொடர் கனமழை; அணை நீர் ஊருக்குள் புகுந்ததால் பூமி இரண்டாக பிளந்தது: 2 கி.மீ நீளத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பீதி

கோட்டா:

ராஜஸ்தானில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் சுர்வால் அணை நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கிராமம் ஒன்றில் பூமி இரண்டாகப் பிளந்தது போல் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா, பூந்தி, சவாய் மாதோபூர் மற்றும் ஜாலாவார் மாவட்டங்கள் கனமழையால் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன; மற்ற கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


கோட்டாவின் டிகோட் துணைப்பிரிவில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மண் மற்றும் கான்கிரீட் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தொடர் மழையால் மாநிலத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சுர்வால் அணை நிரம்பி வழிந்ததால், ஜடாவாதா கிராமம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளிகள் வழியாகப் பாய்ந்த வெள்ள நீர், சுமார் 2 கிலோமீட்டர் நீளம், 100 அடி அகலம் மற்றும் 55 அடி ஆழத்திற்கு பிரம்மாண்டமான பள்ளத்தை உருவாக்கியுள்ளது.


வயல்களிலிருந்து பள்ளத்திற்குள் மழைநீர் பாய்ந்து, ஒருவித நீர்வீழ்ச்சியைப் போல காட்சியளித்ததில், இரண்டு வீடுகள், இரண்டு கடைகள் மற்றும் இரண்டு கோயில்கள் இடிந்து விழுந்தன. ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு, அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%