
சென்னை, ஆக.23-
தெற்கு மத்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக, அதன் மிக முக்கியமான ஐந்து துறைகளான செயல்பாடுகள், வணிகம், நிதி, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவை தற்போது பெண் அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன.
ரயில் கால அட்டவணை, நேரம் தவறாமை மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை முதன்மை தலைமை ஆபரேஷன் மேனேஜர் கே. பத்மஜா மேற்பார்வையிடுகிறார். இவர் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை 1991 பேட்ச் அதிகாரி ஆவார்.
பயணிகள் சேவைகள், சரக்கு வருவாய் மற்றும் வணிக மேம்பாட்டைக் கையாளும் துறையை முதன்மை தலைமை கமர்ஷியல் மேனேஜர் இட்டி பாண்டே நிர்வகிக்கிறார். இவர் ஐஆர்டிஎஸ் 1998 பேட்ச் அதிகாரி.
ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா மற்றும் மேரி சஹேலி போன்ற பல பாதுகாப்பு முயற்சிகளுடன் ரயில்வே பாதுகாப்புப் படையை வழிநடத்துபவர் ஐஜி-கம்- முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அரோமா சிங் தாக்கூர்.இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை 1993 பேட்ச் அதிகாரி.
எட்டு பெரிய மருத்துவமனைகள் மற்றும் மண்டலத்தில் உள்ள 40 சுகாதாரப் பிரிவுகளில் சுகாதாரப் பராமரிப்பு பொறுப்பு அதிகாரியாக முதன்மை தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் நிர்மலா நரசிம்மன். இவர் இந்திய ரயில்வே சுகாதாரப் சேவை 1989 பேட்ச் அதிகாரி ஆவார்-
, நிதி மேலாண்மை மற்றும் வருவாய் வளர்ச்சிப் பிரிவு தலைவராக முதன்மை நிதி ஆலோசகர் டி. ஹேமா சுனீதா பதவி வகிக்கிறார். இவர் இந்திய ரயில்வே அக்கவுன்ட் சர்வீஸ் 1993 பேட்ச் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?