முதல்வர் என்றால் வானளாவிய அதிகாரமா?மகாராஷ்டிரா கவர்னர் பாய்ச்சல்
Jul 11 2025
13

திருநெல்வேலி, ஜூலை 12-
மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருநெல்வேலியில் அளித்த பேட்டி-
நல்லதே போற்றப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஊறு விளைவிப்பதை எதிர்க்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்குமான அதிகாரத்தை வரையறுத்துள்ளது. முதல்வருக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்களை முறையாக பயன்படுத்தினால் மாநில மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்ய முடியும்.
கவர்னர்களுக்கு இருக்கும் ஒன்றிரண்டு அதிகாரங்களுக்குள் புகுந்து அது கூட இருக்கக் கூடாது என்ற நினைப்பது சிறந்த அணுகுமுறை அல்ல. அரசியல் சாசனப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆவார். மதச்சார்பற்ற தன்மை என்பது யார் மனதும் புண்படாமல் செயல்படுவது தான். ஒருவர் மற்றவர் நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கவர்னர், முதல்வரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என கூறுபவர்கள், கவர்னரின் அதிகார வரம்புக்குள் முதல்வர் வரக்கூடாது என்பதான் சரியான அணுகுமுறை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா?அப்படியானால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தான் அதிக அதிகாரம் என எதேச்சதிகாரமாக நடந்து கொள்ள முடியுமா?
இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?