
நாகை, ஆக. 29
மன்னார்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அமிர்தா (எம்.எஸ்சி.), சஞ்சய்குமார் (பி.பி.ஏ.) இருவருக்கும் காதல் மலர்ந்து இரு தரப்பினர் சம்மதத்தின் பேரில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு கடந்த 27ம் தேதி திட்டமிட்டபடி மாப்பிள்ளை வரவில்லை. இது பற்றி அமிர்தா விசாரித்தபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கோ அழைத்துச் சென்று விட்டதாகத் தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள உறவினர் வீட்டில் ‘இருந்த சஞ்சய்குமாரை போலீசார் மீட்டு அமிர்தாவிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு, திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சஞ்சய்குமாருக்கும் அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது. இந்த காதல் ஜோடியின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது. காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே மா.கம்யூ.மாநில செயலாளர் சண்முகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?