மாம்பட்டு ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் .
Aug 24 2025
10

வந்தவாசி, ஆக 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் காலை உற்சவ மூர்த்தி அம்மன் மற்றும் மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு அருட்சக்தி ஆறு.லட்சுமணன் ஸ்வாமிகள் முன்னிலையில் மகா யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. பிறகு மேளதாளத்துடன் அம்மன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?